இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'சைக்கோ' திரைப்படம், இயக்குநர் மிஷ்கினுக்கு நல்ல பாராட்டை பெற்றுத் தந்தது. இதையடுத்து 2014ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் மிஷ்கின் தீவிரம் காட்டிவருகிறார்.
ராக்ஃபோர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா நடிக்க உள்ளார். ராஜ்குமார் பிச்சுமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ளார்.