கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூனம் பாண்டே தனது நண்பர் சாம் பாம்போவுடன் நேற்று இரவு பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பகுதியில் ஊர் சுற்றியுள்ளார். எந்தவித காரணமுமின்றி ஊர் சுற்றியதால், அவரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடைய பி.எம்.டபிள்யூ சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.