தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூகவலைதளங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பூஜா ஹெக்டே! - பூஜா ஹெக்டேவுக்கு கரோனா
மும்பை: கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில், "அனைவருக்கும் நன்றி. நான் கரோனா தொற்றிலிருந்து நன்றாக குணமடைந்துள்ளேன். இறுதியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் நெகட்டிவ் வந்துள்ளது.
உங்களது அனைவரின் வாழ்த்துகளும் அன்புமே என்னை இதிலிருந்து குணமாக்கிய சக்தி. உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டே தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்', விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 65' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.