நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதைத்தொடர்ந்து பூஜா ஹெக்டே (Pooja Hegde) தற்போது தனது விடுமுறைய மாலத்தீவில் (Maldives) கொண்டாடிவருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவில் இருந்தவாறு பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பூஜா ஹெக்டே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இது தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
நீச்சல் குளத்தில் இருந்தவாறே உணவு உண்ணும் புகைப்பட நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு கேப்சனாக அசாதாரண அனுபவங்களைத் தேடும் ஒரு சாதாரண பெண் எனத் தலைப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே கைவசம், ராம் சரண் - சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா', பிரபாஸுடன் 'ராதே ஷ்யாம்', மகேஷ் பாபுவுடன் 'SSMB28', ரன்வீர் சிங்குடன் 'சர்க்கஸ்', சல்மான் கானுடன் 'கபி ஈத் கபி தீபாவளி' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
இதையும் படிங்க: பாத்து துண்டு விழப்போது...ரன்வீரை கலாய்த்த பூஜா ஹெக்டே