தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பெரிதாக கவனிக்கப்படாத இவர், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கு விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்தப் படத்துக்கான நடனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
‘பீஸ்ட்’ மோடில் பூஜா ஹெக்டே
‘பீஸ்ட்’ படத்துக்கான நடனப் பயிற்சிகளை பூஜா ஹெக்டே மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் ‘பீஸ்ட்’ படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் சென்னையில் நடைபெறவுள்ளது. ஒரு பாடல் காட்சிக்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாடலுக்கான பயிற்சியில்தான் பூஜா ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ரஜினி எப்படி அமெரிக்கா சென்றார்: சர்ச்சையை கிளப்பும் கஸ்தூரி