'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படம், 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தை, இந்தியாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான பொன்னியின் செல்வன் - 1, 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.