அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார். கோலிவுட்டில் எம்ஜிஆர் உள்பட பலரும் இந்நாவலை திரைப்படமாக்க முயற்சித்தனர். ஆனால் இந்தக் கனவு தற்போது மணிரத்னம் மூலம் மெய்ப்பட உள்ளது.
மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. தாய்லாந்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.