எழுத்தாளர் கல்கியின் வரலாற்று படைப்பான 'பொன்னியின் செல்வன்' நாவலைமணிரத்னம் திரைப்படமாக எடுத்துவருகிறார். இப்படத்தில் முக்கிய பாத்திரங்களாக விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுவருகிறது. படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக படத்தின் தலைப்பு கொண்ட எழுத்துருவை (Title Font) படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்துரு இருந்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்னிந்திய கலை, கலாசாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது - ஆளுநர் புகழாரம்