மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டப் பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகம் வெளியீட்டுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதனிடையே, சில சமூக வலைதளத்தில் முன்னணி ஓடிடி நிறுவனம் ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்தது.