தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' - கைகோர்த்த கலை இயக்குநர்! - அனுஷ்கா

இயக்குநர் மணிரத்னம் இயக்க இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பணிபுரியும் கலை இயக்குநர் யார் என்பது முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mani Ratnam

By

Published : Sep 9, 2019, 7:29 PM IST

எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர்கள் அமிதாப் பச்சன், கார்த்தி, விக்ரம், ஜெயராம், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டவர்களும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அனுஷ்கா, அமலா பால் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர்களும் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த நாவல் குறித்து நல்ல அனுபவமும் நுணுக்கங்களும் தெரிந்த கைதேர்ந்த கலை இயக்குநரால்தான் கதாபாத்திரங்களையும் இடங்களையும் திரையில் கொண்டுவர முடியும். இந்நிலையில், இப்படத்தின் கலைஇயக்குநராக தோட்டா தரணி ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோட்டா தரணி மணிரத்னத்தின் 'நாயகன்', 'தளபதி' படங்களில் பணியாற்றி அதற்காக தேசிய விருது வாங்கியவர். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்தின் படத்தில் பணியாற்ற உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details