இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இத்திரைப்படம், கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTTஇல் வெளியாகவுள்ளது என தகவல் கசிந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது.