ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
'எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்'- சூர்யாவை புகழ்ந்த இயக்குநர்! - சினிமா செய்திகள்
சூர்யாவை பாராட்டி 'பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக திரைப் பிரபலங்கள் பலரும் இப்படத்திற்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,"மாற்றம் ஒன்றே மாறாதது. என் தம்பிகளா, தங்கச்சிங்களா, பெற்றோர்களை நல்ல பாத்துக்கோங்க. நம்பிக்கையை விட்றாதிங்க.
மதங்களை கடந்து மனிதமே முக்கியம். அன்பை விதைப்போம். என்ன மாதிரி பலருக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றியைத் தன் வெற்றியாய் நினைச்சு மகிழும் மனம் எத்தனை பேருக்கு வரும். இது எல்லாத்துக்கும் மனசு வேண்டும். சூர்யாவிற்கு ரொம்பவே பெரிய மனசு" என்று தெரிவித்துள்ளார்.