ஸ்ட்ரீமிங் தளங்களில் புதிய முயற்சிகளை எடுத்து வரும் அமேசான் ப்ரைம், தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லர் மே மாதம் 21ஆம் தேதி இரவு 8.43 மணிக்கு, தமிழ்நாட்டில் உள்ள 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களிடம் இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது.
இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர் - பொன்மகள் வந்தாள் ட்ரெய்லர் இரண்டு கோடி பார்வைகள்
அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி, யூடியூப் வாயிலாக இரண்டு கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Ponmagal vanthaal trailer crossed twenty million views
'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரெய்லர் வெளியிட்ட 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்திற்கு மிக பிரமாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க... 'நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாதிப் படங்கள் சித்தரிப்பதில்லை'