தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ வெளியாகும் தேதி அறிவிப்பு - சூர்யா

ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ponmagal vandhal release date revealed
ponmagal vandhal release date revealed

By

Published : Mar 2, 2020, 6:44 PM IST

ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27ஆம் தேதி முதல் உலகெங்கிலும் இப்படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் பலர் நடித்துள்ளதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details