தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு - பொன்மகள் வந்தாள் இயக்குநர் மன்னிப்பு

சென்னை: ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Breaking News

By

Published : May 30, 2020, 12:44 AM IST

ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், "AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளக்கிறோம்.

இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details