சென்னை:தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை என்றாலே களைகட்டும். பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும்.
ஆனால் கரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, திரையரங்குகளில் இருக்கை குறைப்பு போன்ற காரணங்களால் அஜித்தின் வலிமை, ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைத்தன.
ஒரே ஒரு டிக்கெட் புக்: தமிழ் சினிமாவிற்கு சோதனை
இதனால் இந்த ஆண்டு பொங்கல் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாத பொங்கலாக மாறியுள்ளது. இருப்பினும் சிறிய பட்ஜெட் படங்கள் இன்று வெளியாகியுள்ளன. விதார்த்தின் 25ஆவது படமான 'கார்பன்', குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்', சதீஷின் 'நாய் சேகர்', சசிகுமாரின் 'கொம்பு வெச்ச சிங்கம்டா' உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்தப் படங்களுக்கு எல்லாம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனைய படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்றும், இதனால் பல ஊர்களில் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டதாகவும் தகவல் வருகிறது.
சென்னையில் ஒரு திரையரங்கில் என்ன சொல்ல போகிறாய் படத்தைக் காணவந்த பார்வையாளர் எண்ணிக்கை 12 மட்டுமே. நாய் சேகர் படத்துக்கு வந்த பார்வையாளர் எண்ணிக்கை வெறும் பத்தே பேர்தான். கார்பன் படத்திற்கு ஒரே ஒரு டிக்கெட்தான் புக் ஆனதால் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஒரு டிக்கெட் கூட புக் ஆகாத கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா படத்துக்கு ஒரு டிக்கெட்கூட புக் ஆகவில்லை என்கிறார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பொங்கல் வந்ததுமில்லை; இனி வரப் போவதுமில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: பொருள்கள் மட்டுமல்ல; நீதியும் இனி ஆன்லைனில்தான்!