தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி நிற்கும் திரைப்படங்கள்! - வலிமை வெளியீட்டுத் தேதி

வலிமை திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, வருகிற பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்ட படங்களின் பெயர் விவரங்களை கீழே காண்போம்.

பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி நிற்கும் திரைப்படங்கள்!
பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி நிற்கும் திரைப்படங்கள்!

By

Published : Jan 9, 2022, 11:02 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரோனோ பரவல் காரணமாக 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்கங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை'யின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்தச் சூழலை பயன்படுத்தி லாபம் காண பல சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன. இதுவரை அவ்வாறு வெளியாவதாக உறுதி செய்யப்பட்ட படங்களின் பெயர் விவரங்கள் குறித்து காணலாம்.

திரைப்பட பெயர் விவரங்கள் பின்வருமாறு:

* நாய் சேகர்

* ஏஜிபி

*என்ன சொல்ல போகிறாய்

*மருத

*கொம்பு வச்ச சிங்கம்டா

*கார்பன்

*ஐஸ்வர்யா முருகன்

*பாசக்காரபய ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதையும் படிங்க:போதைப் பொருள் விழிப்புணர்வு: ஜெயம் ரவி குறும்படத்தை வெளியிட்ட ஏடிஜிபி!

ABOUT THE AUTHOR

...view details