தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..! - டென்னிஸ் வெல்லினியுவ் திரைப்படங்கள்

அவனின் தலையிலிருந்து சிந்திய ரத்தம், அங்கே அவனால் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையில் இருந்து வழிந்தோடிய இரத்தத்துடன் கலந்தது. அந்த ரத்தத்தால் வக்கிரங்கள் எதையும் அறிய முடியாது போலும்..!

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!
Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

By

Published : Jan 27, 2022, 8:36 PM IST

மரணம் என்னும் உணர்வு, அனைவரும் அனுபவிக்கும் கடைசி உணர்வு. அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை, ’Death is the only communist' என்று ஓஷோ கூறுவார்.

இந்த உணர்வை முழுதாக உணர்ந்தவர்கள் உயிரோடு இருப்பதில்லை. எனினும் ஒரு கோணத்தில் பார்த்தால், நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நாள்களும் மரணத்தை நோக்கிய பயணம் தானே..? இருந்தாலும், நம் சூழலும், வாழ்க்கை முறைகளும், மரணம் என்பது எங்கோ தொலை தூரத்தில் இருப்பது போல் ஒரு மாயபின்பத்தை நம் பெரும்பாலான வாழ்நாள்களில் காட்டிவிடுகிறது.

மரணத்தை வெகு நெருக்கத்தில் பார்த்து கடந்தவர்களின் வாழ்க்கையும், அதில் அவர்கள் படும் போராட்டத்தையும், குற்ற உணர்வுகளையும், அவர்களின் இருவேறு முடிவுகளையும் கூறும் திரைப்படம் தான் டென்னிஸ் வெல்லினியூவ் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘Polytechnique'.

இத்திரைப்படம் கனடா நாட்டின் மாண்ட்ரியல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்தப் படுகொலைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ’Montreal massacre' எனச் சொல்லப்படும் இந்தப் படுகொலை சம்பவம், கனடா நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய படுகொலை சம்பவமாகும்.

திடீரென கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த ஒருவர், தான் வைத்திருந்த 'Ruger mini 14' ரகத் துப்பாக்கியைக் கொண்டு பெண்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளார். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து, அதில் பெண்களை மட்டும் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் டிசம்பர் 6 1989ஆம் ஆண்டு நடந்தேறியது. இச்சம்பவத்தில் 14 பெண்கள் உயிரிழந்தனர், மேலும் 10 பெண்களும் 4 ஆண்களும் படுகாயம் அடைந்தனர். இப்படுகொலை ஒரு பெண்ணிய எதிர்ப்புப் படுகொலையாகப் பார்க்கப்படுகிறது.

மரணமும்,வன்மமும்

திரைப்படத்தின் ஆரம்ப காட்சியில்,ஒரு இளைஞன் கையில் பெரிய துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்ய முனைகிறான்..! அந்த நொடியில் அவன் எண்ணத்தில் சிறு மாற்றம் ஏற்பட, அவனின் மரண முடிவிற்குக் காரணமான வன்ம எண்ணங்களைத் தீர்த்துக்கொள்ள முற்படுகிறான்.

அவனின் வன்மமும், அதன் அர்த்தமில்லாதத் தன்மையும் அவன் அதை செய்ய புறப்படும் காட்சியின் பின்னே ஒலிக்கும் அவனின் மனவசனங்களில் தெரிகிறது.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

இவன் செய்யவிருக்கும் படுகொலைக்கு இவனிடம் காரணம் உள்ளது. ஆனால் அதை இயக்குநர் பெரிதாக விளக்கவில்லை, ஏனெனில் அது பெண்ணியவாதிகள் மேல் அவனுக்கு இருக்கும் தனிப்பட்ட வன்மமாக, விளக்கப்படாத கோபமாக மட்டுமே இயக்குநர் காட்ட நினைத்திருக்கிறார். அதனால் தான் அதை வெறும் வசனங்களாக கடத்திருப்பார் இயக்குநர்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

அவனால் அவ்வளவு கனமான வன்மங்களை வைத்துக் கொண்டு நிம்மதியாக சாகமுடியவில்லை போலும். ஆகையால் அதைக் குறைக்க பெரிய துப்பாக்கியுடன் கிளம்புகிறான்.

அதில் அவன் மனஓட்டத்தை காட்சிப்படுத்தியதும், அவனின் மனப்புலம்பலை காட்சிகளின் பின்னணியில் ஓடும் வசனங்களாக சேர்த்ததும் சிறந்தத் திரைமொழி அணுகுமுறையே.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

படுகொலை செய்யப் போகும் முன் தன் தாய்க்கு தன் முடிவை சொல்லிக் கடிதம் எழுதுகிறான். அதில், ‘ இது தவிர்க்கமுடியாதது’ என்று குறிப்பிடுகிறான். இவனின் இவ்வளவு கோபத்திற்குக் காரணம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

இவனின் நடத்தைகளையும், புலம்பல்களையும் கேட்கையில் அதனின் தாக்கத்தை பார்வையாளர்களும் உணர்ந்துகொள்ள முடியும். அவனின் மொத்த வக்கிரத்தையும் படுகொலைகள் மூலம் தீர்த்துக்கொண்டு அதே இடத்தில் தற்கொலை செய்துகொள்கிறான்.

அவனின் தலையிலிருந்து சிதறிய ரத்தம், அங்கே அவனால் படுகொலை செய்யப்பட்ட பெண் சிரத்திலிருந்து வழிந்தோடிய ரத்தத்துடன் கலந்தது. பாவம்... அந்த ரத்தத்தால் வக்கிரங்கள் எதையும் அறிய முடியாது போலும்..!

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

வாழ்வும், கோட்பாடுகளும்

மறுபக்கம், இயந்திரப் பொறியியல் படிப்பு படித்து வரும் வலேரி மற்றும் அவளின் தோழி ஸ்டெபனியின் கதை நகர்கிறது. வானியல் பொறியாளராக ஆசைப்படும் வலேரியை, ஆணாதிக்க சமூகத்தின் கோட்பாடுகள் சற்று தாழ்ந்தே பார்க்கின்றன. இதை ஓரிரண்டுக் காட்சிகளில் இயக்குநர் தெளிவுப்படுத்தியிருப்பார்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

வலேரிக்கு இந்தக் கோட்பாடுகளில் இருக்க விருப்பமில்லை. ஆனால், வலேரியின் தோழியான ஸ்டெப்னிக்கு இதைப் பற்றிய எந்தக் கருத்துகளும் இல்லை.

இந்தக் கோட்பாடுகளில் எந்தக் கருத்தும் இல்லாத அவள், அதைக் காரணமின்றி ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையான பெண்களின் பிரதிபலிப்பாக ஸ்டெப்னியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இவர்களின் சக கல்லூரி வாசியாக ஜெப் எனும் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் பெரிதாக விளக்கவில்லை. ஒரு சாதாரண ஆணாக காட்டிருப்பார், அதன் காரணம் இத்திரைப்படத்தின் இறுதியில் ஜெப்பிற்கு ஏற்படும் முடிவில் நமக்குப் புரியவரும்.

மரணமும், குற்ற உணர்வும்

ஆரம்பத்தில் படுகொலை செய்யத் திட்டமிட்ட இளைஞன், நினைத்தது போல் கல்லூரி வளாகத்திற்குள் வந்து படுகொலை செய்கிறான். அதிலிருந்து இத்திரைப்படம் ஜெப்பின் பார்வையில் பயணிக்கிறது.

அதில் ஒரு பக்கம் ஆணாக இருக்கும் ஜெப் தப்பிக்கிறான். இருப்பினும் அவன் இந்தப் படுகொலையில் ஏதாவது செய்து யாரையாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறான்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

மரணத்தை நெறுங்கிய நிலையில் படுகாயமடைந்த பெண்ணிடம் ,’நிச்சயம் வந்து காப்பாற்றுவேன்’ என்று சொல்லிக் கிளம்பிய ஜெப்பால் எதுவும் செய்ய முடியவில்லை.

அந்தக் கிரோதப் படுகொலையை நேரில் கண்ட ஜெப், அதைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்ற இயலாமையில் தன்னுடைய வாழ்வை வாழ நேரிடுகிறது.

அந்தக் குற்றஉணர்வு அவன் வாழ்வை மரணத்தை விடக் கொடுமையாக மாற்றுகிறது. ஒரு சராசரி ஆணாக, அவனால் இதற்குத் தீர்வாக எதுவும் செய்யமுடியவில்லை. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறான் ஜெப்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

மரணமும், வாழ்வும்

மேலே ஜெப்பின் பார்வையில் நகர்ந்த கதை, அவனின் முடிவிற்குப் பிறகு வலேரியின் பார்வையில் படுகொலைக் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது.

அந்தப் படுகொலையில் வலேரி மட்டும் தப்பிக்கிறாள். அவளும், தன்னால் இதைத் தடுக்க முடியாதா என்ற எண்ணத்தில் போராடுகிறாள். அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளின் தோழியின் மரணத்தைக் கண் எதிரே காண்கிறாள்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

ஜெப்பை போல வலேரியாளும் அதைக் கடக்க முடியவில்லை. அந்த அலறல் சட்டங்களும், துப்பாக்கிச் சத்தமும் அவளின் மனதின் பிண்ணனியில் ஒழித்துக்கொண்டே தான் இருக்கிறது.

பல வருடங்கள் இப்படி கடக்க, வலேரி அவள் நினைத்தபடி ஒரு வானியல் பொறியாளராகிறாள். கூடிய விரைவில் தாயாகவும் மாறப்போகிறாள் என்று அவளுக்குத் தெரியவருகிறது. அந்த நொடியில், இத்தனை நாள் அவள் வாழ்நாளில் அவளின் மனதில் ஒழித்த அந்த சப்தத்திற்கு ஒரு தீர்வை வலேரி காண்கிறாள்.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

அப்போது, யாராலும் படிக்கப்படாது என அறிந்தும் அந்தக் கொளையாளியின் தாய்க்கு ஒரு கடிதம் எழுதுவது போல் தன் மனக்குமுறல்களை காகிதத்தில் கொட்டுகிறாள் வலேரி.

அதில் வலேரி, ’உங்கள் மகன் எனக்கு வாழ்வின் பயத்தை காண்பித்து விட்டார். அவர் இப்போது சுதந்திரமாக இறந்தும் விட்டார். ஆனால் நான் சுதந்திரமாக இல்லை. எனக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது.

அது ஆணாகப் பிறந்தால் அவனுக்கு அன்பு காட்டக் கற்றுக்கொடுப்பேன். பெண்ணாகப் பிறந்தால் அவளுக்கு இந்த உலகம் உன்னுடையது என்று சொல்லுவேன்’ எனக் கூறும் வசனமே வலேறியின் மனதில் ஒழித்த அலறல் சப்தத்திற்கானத் தீர்வு.

Polytechnique - சாவை விட சாவைக் கண்டவரின் வாழ்வே கொடுமையானது..!

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் இப்படத்தின் தாக்கத்திற்கு முக்கிய காரணங்கள். நாமே துப்பாக்கி முனையில் இருந்து விடுபட்டது போல் ஒரு உணர்வு, இத்திரைப்படத்தை பார்த்து முடிக்கும் போது ஏற்படும்.

டென்னிஸ் வெல்லினியூவ் இக்கதையைக் கையாண்ட விதமும், திரைக்கதை அமைப்பும் அவர் ஒரு ’மாஸ்டர்’ என்பதற்கானச் சான்று.

இதையும் படிங்க:'I lost my body' - (கை)விடப்பட்டக் கதை

ABOUT THE AUTHOR

...view details