தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட கயவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக்கோரி வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே பூதாகரமாகியுள்ள நிலையில் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இதனிடையே, பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது மாணவர்களிடத்தில் அரசின் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக பகல் வேஷம் போடும் அரசை கண்டித்து வலைதள பக்கங்களில் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து காணொளி மூலம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதில் அவர், பொள்ளாச்சி சம்பந்தப்பட்ட இரண்டு வீடியோவை பார்த்தேன் ஆனால் அதை என்னால் பார்க்க முடியவில்லை தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து இதுபோன்று பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது என ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.