திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31 அன்று புதிய கட்சி தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் தனது ஆதரவாளர்களுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்திவருகிறார்.
ரஜினி வீட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு! - ரஜினி வீடு
சென்னை: ரஜினி கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் அவரது போயஸ்கார்டன் இல்லத்திற்கு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
rajini
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 7) இரவு திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சிலர் நிவர் புயலால் வீடு இழந்து பாதிக்கப்பட்டதாக கூறி கைக்குழந்தையுடன் நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பு உதவி கேட்கும் காணொலி வெளியானது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போயஸ் கார்டனிலுள்ள வீட்டிற்கு 12 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.