தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! - சூர்யா அலுவலகம்

சென்னை: ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சூர்யா
சூர்யா

By

Published : Sep 28, 2020, 3:52 PM IST

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2ஆவது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடையளம் தெரியாத நபர் ஒருவர் இன்று (செப்.28) மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

சூர்யா அலுவலகம்

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல்துறையினர், மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த இடத்தில் இயங்கிவந்த அலுவலகத்தை சூர்யா 6 மாதத்திற்கு முன்பே அடையாறுக்கு மாற்றிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்தது. தற்போது காவல்துறையினர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details