தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டம், பாட்டம்: நடிகை வனிதா மீது புகார்! - Actress Vanitha recent news

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி, தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் வீட்டில் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சி நடத்திய நடிகை வனிதா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை  மீறி வீட்டில் ஆட்டம்,பாட்டம் நிகழ்ச்சி நடத்திய நடிகை வனிதா மீது புகார்!
ஊரடங்கு உத்தரவை  மீறி வீட்டில் ஆட்டம்,பாட்டம் நிகழ்ச்சி நடத்திய நடிகை வனிதா மீது புகார்!

By

Published : Jul 28, 2020, 9:49 PM IST

சென்னை அய்யப்பன் தாங்கல் பகுதியில் உள்ள பிரஸ்டிஜ் பெல்லா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை வனிதா.

இவர் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் நடிகை வனிதா இன்று (ஜூலை 28) தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பத்திரிகையாளர்கள் உள்பட 20 மேற்பட்ட நபர்களை வரவழைத்து தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சி (ஈவெண்ட் ஷோ) நடத்தியுள்ளார்.

இதன் விளைவாக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பொதுச்செயலாளரான நிஷா தொட்டா நடிகை வனிதா ஊரடங்கு உத்தரவை மீறி மாநகராட்சி மற்றும் அசோசியேஷனில் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details