தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்ன பிக்பாஸ் ஒரே அக்கபோரா இருக்கு... ஜாங்கிரி மதுமிதா மீது புகார்! - மதுமிதா

சென்னை: தற்கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

Madhumitha

By

Published : Aug 21, 2019, 3:57 PM IST

Updated : Aug 21, 2019, 4:44 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. இப்போது இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக நடிகை மதுமிதா இருந்துள்ளார். இவர் சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்திக் கொண்டதால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும், ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள நாட்களுக்கான பாக்கி பணத்தை விரைவில் மதுமிதாவுக்கு தருவதாகக் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுமிதா, ஆகஸ்ட் 19ஆம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட கிண்டி காவல்துறையினர், மதுமிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்தது பற்றி எந்த ஒரு தகவலும் வரவில்லை எனவும் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு வந்தால் சட்டரீதியாக எதிர் கொள்வதாகவும் தெரிவித்தார்.

Last Updated : Aug 21, 2019, 4:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details