நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
‘பீஸ்ட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. பிரமாண்ட பாடல் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்படவுள்ளதாம். இதுமட்டுமில்லாமல், ஒரு மாஸான சண்டைக் காட்சியை ஓப்பனிங்கில் வைக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளது.