சிம்பு, வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான இப்படத்தை பதம் குமார் தயாரித்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சிம்பு நடிப்பிலேயே உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளார். இயக்குநர் யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.