ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. மக்களவை தேர்தலுக்கு முன்பே வெளியாக இருந்த இத்திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இந்தத் திரைப்படம் மோடிக்கு ஆதரவாக எடுக்கப்பட்டுள்ள படம், தேர்தல் விதிமுறைகளை மீறி மோடிக்கு பரப்புரை செய்யும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்தனர். மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்ற மறுநாள் (மே 24) இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இதன் முதல்நாள் வசூல் ரூ.2.88 கோடி என்று சினிமா விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
வசூல் வேட்டையில் நரேந்திர மோடி திரைப்படம்..! - விவேக் ஓபராய்
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ வசூலை வாரிக் குவித்து வருகிறது.
pm narendra modi
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மெதுவாக தொடங்கிய ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படத்தின் வியாபாரம் மாலைக்குள் சூடுபிடித்தது. வெள்ளி அன்று இந்தியா முழுவதும் வசூல் ரூ.2.88 கோடி என்றும் இரண்டாம் நாள் வசூல் ரூ.10 கோடியை எட்டியுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
மோடி படம் வசூல் குவித்து வருவதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். விவேக் ஓபராய் தனது நண்பர்களுக்கு நட்சத்திர விடுதி ஒன்றில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.