தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவரின் வசீகர குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் 2015ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்பும் ஸ்ரேயா கோஷல் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். முன்னதாக மார்ச் மாதம் தான் கருவுற்றிருப்பதாக சமூகவலைதளங்கள் வாயிலாக ஸ்ரேயா ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (மே.22) ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டர் வாயிலாக ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "இன்று மதியம் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு இது.
ஷிலாதித்யா, நான் மற்றும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்கள் குழந்தைக்கான எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் ஸ்ரேயாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரேயா கோஷல் காலில் விழுந்த மூதாட்டி - வைரல் வீடியோ