நடிகர் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'பிளான் பண்ணி பண்ணனும்'. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். பயணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், 'பிளான் பண்ணி பண்ணனும்' திரைப்படம் இன்று (செப் 24) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.