ரியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார்.
பாணா காத்தாடி, செம போத ஆகாத திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநருடன் கூட்டணியமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பயணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம்உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னர், இத்திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு கடன் பிரச்னை காரணமாக திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலால் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் 'பிளான் பண்ணி பண்ணனும்' திரைப்படமானது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு கவர்ச்சியாட்டம் போட்ட ஜீலி; குதூகலத்தில் ரசிகர்கள்!