இயக்குநர், எழுத்தாளர், ஸ்டோரி போர்ட் ஆர்டிஸ்ட் என ஹாலிவுட் திரையுலகில் 20 வருடங்களாகப் பணியாற்றி வந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் ராப் கிப்ஸ் (Rob Gibbs) தன் 55ஆவது வயதில் இன்று உயிரிழந்தார்.
அனிமேஷன் உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான பிக்ஸரின் திரைப்படங்களான ’டாய் ஸ்டோரி 2’ , ’ஃபைண்டிங் நீமோ’, ’மான்ஸ்டர்’ உள்ளிட்டவற்றில் இவரது பங்கு அளப்பரியது.
பிக்ஸர் தவிர்த்து, 2008ஆம் ஆண்டு வெளிவந்த குறும்படமான ’டோக்யோ மாஸ்டர்’, ’மாஸ்டர்ஸ் டால் டேல்ஸ்’, 2012 ஆம் ஆண்டு வந்த ’த கார்ஸ்’ அதன் தொடர்ச்சியான பாகங்கள் உள்ளிட்டவற்றிலும் தன் பங்களிப்பை அளித்திருக்கிறார்.
மேலும் வரவிருக்கும் டிஸ்னியின் ’மான்ஸ்டர்ஸ் அட் வொர்க்’ சீரிஸிலும், ’இன்க்ரெடிபில்ஸ் 2’ உள்ளிட்டவற்றிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இதையும் படிங்க:பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்