மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘பிசாசு 2’. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மன்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
‘பிசாசு 2’ திரைப்படம் திண்டுக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் லொக்கேஷன் பார்த்திருக்கிறார் மிஷ்கின். இதுகுறித்து ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மன்ட் தயாரிப்பு குழுவைச் சேர்ந்த ஸ்ரீராம், பிசாசு 2 படப்பிடிப்பு தளத்துக்கு எனது இயக்குநர் மிஷ்கின் உடன் செல்கிறேன். அங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என குறிப்பிட்டுள்ளார்.