ஹாலிவுட் உலகில் மிகவும் பிரபலமான கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் தொடர்கிறது. சேன் கோனரி, டேவிட் நிவன், ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரேக் என தொடரும் ஜேம்ஸ் பாண்ட் பட்டியலில், புதிதாக பெண் ஒருவர் நடிக்கவுள்ளார்.
பெண்களுக்கு வழிவிடும் நேரம் இதுதான் - புதிய பாண்ட் குறித்து பழைய பாண்ட் - பியர்ஸ் பிராஸ்ணன்
புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிக்க வேண்டும் என்பதில் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன் ஆர்வமாக உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன், 40 ஆண்டுகளாக ஆண்களே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர். பெண்களுக்கு வழிவிடும் நேரம் இதுதான். ஆண்கள் விலகிச் செல்லுங்கள். இனி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள் நடிப்பதுதான் உற்சாகத்தை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரேக்குக்கு ‘நோ டைம் டு டை’ - தான் (No Time to Die) கடைசி 007 திரைப்படமாக இருக்கப் போகிறது. இந்தத் திரைப்படம் வரும் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.