தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வனிதா விஜய்குமாரின் 'பிக்கப் டிராப்' போஸ்டர் வெளியீடு - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை வினிதா விஜய்குமார் நடிக்கும், 'பிக்கப் டிராப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வனிதா
வனிதா

By

Published : Jul 24, 2021, 3:50 PM IST

நடிகை வனிதா விஜய்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் மாலை மாற்றிக் கொள்ளும் புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வந்தது.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று (ஜூலை 23) சென்னையில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது இது திருமணம் இல்லை என்றும், படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் என விளக்கமளித்தனர்.

முதல்முறையாக இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'பிக்கப் டிராப்' என பெயரிடப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், இருவரும் திருமணக் கோலத்தில் பைக்கில் செல்வது போல் உள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நான்கு இல்ல... 40 திருமணம் செய்வேன் - இது வனிதாவின் 'உரிமை'க்குரல்!

ABOUT THE AUTHOR

...view details