'மாளிகை' திரைப்படம் சாந்தி டெலிஃபிலிம் சார்பில் பவானி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இயக்குநர் தில் சத்யா இயக்கியுள்ளார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்முறையாக இரட்டைவேடங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரை கையிலேயே பிடிக்க முடியாதாம்... செம பிஸியாம்! - Maaligai
சென்னை: பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தற்போது நடிப்பில் செம பிஸியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். ரவிக்குமார், ஜெ.கார்த்திக், அலி, அசுதோஷ் ரானா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் தில் சத்தியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி டீசரை வெளியிட்டார்.
இவ்விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், 'மாளிகை திரைப்படத்தில் நான் காவல் ஆணையர் வேடத்தில் நடிக்கிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்ததால் உடனேயே நடிக்க சம்மதித்தேன். தற்போது நான் ஏழு தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறேன். எனவே நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்' என்றார்.