சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த 'பிச்சைக்காரன்' 2016ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார். இதில் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் கதையை கரோனா ஊரடங்கு காலத்தில், விஜய் ஆண்டனியே எழுதினார்.
இதனையடுத்து 'பிச்சைக்காரன் 2' படத்தை, தேசிய விருது வென்ற ஆனந்த் கிருஷ்ணன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனியே படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அவரே படத்தில் நடித்து, இயக்கி, தயாரித்து, இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.