நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'பேட்ட'. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், நவாசுதீன், சித்திக், விஜய் சேதுபதி, சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பேட்ட திரைப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் அந்தக் காணொலியில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி இருக்கும் மாஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிலும் குறிப்பாக இன்னொரு டீ சாப்பிடலாமா என ரஜினிகாந்த் ஸ்டைலாக கேட்கும் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், வாவ் இந்தக் காட்சியைப் போய் டெலிட் செய்துவிட்டார்களே எனப் புலம்பிவருகின்றனர்.
இதையும் படிங்க:இயக்குநர் சங்கத் தேர்தல் - கே. பாக்யராஜ் போட்டி