ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தவர் மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் தெலுங்கில் ஹீரோ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் 64 படத்தில் கதாநாயகியாக மாளவிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விருது விழாவிற்கு கவர்ச்சியாக வந்த ரஜினி பட நாயகி! - sexy dress
சர்வதேச திரைப்பட விருது விழாவில் மாளவிகா மோகனன் அணிந்து வந்த கவர்ச்சியான ஆடை வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. ஃபேஷன் மற்றும் விருது நிகழ்ச்சிக்கு செல்லும் மாளவிகா கவர்ச்சியான ஆடைகளையே அணிந்து செல்வார். அந்த வகையில், மும்பையில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. நீல நிறத்தில் டிரான்ஸ்ப்ரண்ட்டான கவர்ச்சி உடையணிந்து வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தற்போது மாளவிகா கவர்ச்சி ஆடையுடன் வந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருபக்கம் நெட்டிசன்கள் இவரை இலைமறைகாயாக பேசி வந்தாலும் ஒரு சிலர் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.