தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்தியன் 2' சண்டைக்காட்சியை எங்கு படமாக்குறாங்கன்னு தெரியுமா...!

கட்சி வேலையில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் தனது 'இந்தியன் 2' படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார்.

indian 2

By

Published : Oct 18, 2019, 1:32 PM IST

இந்தியன் 2 படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது போபாலில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி வேலையில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் தனது 'இந்தியன் 2' படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார். 'ஷங்கர்' இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'இந்தியன் 2'.


1996ஆம் ஆண்டு வெளியான ’இந்தியன்' படத்தின் அடுத்த பாகமாக உருவாகிவரும் இதனை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் சண்டைக்காட்சிகள் போபாலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டைக் காட்சியை பீட்டர் ஹெய்ன் ஒருங்கிணைப்பு செய்து வருகிறார். அதேபோல் தைவானிலும் சண்டைக்காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிங்க: ஆந்திராவில் முகாமிட்டுள்ள 'இந்தியன் 2' படக்குழு

ABOUT THE AUTHOR

...view details