இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் வெற்றிபெற்றன.
அதனைத் தொடர்ந்து 'குதிரைவால்' திரைப்படமும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. 'ரைட்டர்', 'பொம்மை நாயகி' படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கும் 'சேத்துமான்' எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கேரளாவில் நடைபெறவிருக்கும் (IFFK -International Film Festival Of Kerala) திரையிடலுக்காக 'சேத்துமான்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரேம் குமார் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். பிந்து மாலினி இசை அமைத்துள்ளார்.
பா. இரஞ்சித்தின் தயாரிப்பில் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகிறது!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் திரைப்படமாக தயாரிக்கிறது.
perumal murugan story filmed produced by Pa Ranjith
இதையும் படிங்க... திரைப்பட விழாவில் ஜோடியாக விக்னேஷ் சிவன் - நயன்!