தொலைக்காட்சியின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் பாயல் ராஜ்புட். இந்தி, பஞ்சாபி மொழிகளில் நடிகையாக பிரபலமானாலும், தெலுங்கில் வெளியான 'ஆர்.எக்ஸ். 100' படத்தின் மூலம் தென்னிந்திய பக்கம் பிரபலமாகியுள்ளார்.
இவர் நடித்த முதல் படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இப்படத்திற்குப் பிறகு, இவருக்கு அதிகமான பாலியல் தொல்லை வந்துள்ளது என்று அவரே தெரிவித்துள்ளார்.
தமிழில் கே. எஸ், அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'ஏஞ்சல்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாயல் ராஜ்புட் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் கயல் ஆனந்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பாயல் ராஜ்புட் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வரும் சேலஞ்ச்களை செய்து, அதன் புகைப்படத்தை தனது சமூக வலை தளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சமூக வலை தளத்தில் ட்ரெண்டான பில்லோ சேலஞ்சை தைரியமாக செய்தார். உடலை உடையேதும் இல்லாமல், தலையணையை மட்டும் பெல்ட் மூலமாக உடலோடு கட்டி புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும். இந்த சேலஞ்ச் புகைப்படத்தை வெளியிட்ட பாயல் ராஜ்புட் பில்லோ சேலஞ்சை விட, இவரது பில்லோ ஆடை புகைப்படமே வைரலானது.
இதனைத் தொடர்ந்து தற்போது செய்தித்தாளை ஆடையாக அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு என் ஆடை எப்படி உள்ளது என்று கேட்டுள்ளார்.
ஏற்கெனவே கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் பாயல், தற்போது கோடை காலத்திலும் ரசிகர்களை இன்னும் கிறங்கடித்து வருகிறார்.