தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது 'பிங்க்' படத்தின் (#PSPK26) தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். பாலிவுட்டில் 'பிங்க்' மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பிலும், தமிழில் 'நேர்கொண்ட பார்வை' அஜித் நடிப்பிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தன.
தற்போது இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டுவருகிறது. இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீராம் வேணு இப்படத்தை இயக்குகிறார். மேலும், 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர், தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கிறார்.