கரோனா தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் 21 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 14 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் 21 நாள்களுக்கு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நடிகர், நடிகைகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கத்ரீனா வீட்டை பெருக்க... ஹர்பஜன் கமெண்ட் போட... அடடா என்ன வீடியோன்னு குதுகலமான ரசிகர்கள்!