ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு இயக்குநர்கள் இணைந்து ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குவது தற்போது உள்ள காலகட்டத்தில் ட்ரெண்டாகிவிட்டது.
நெட்ஃப்ளிக்ஸ் தளம் தற்போது முதல்முறையாக 'பாவக் கதைகள்' என்னும் ஆந்தாலஜி தமிழ் படத்தை தயாரித்துள்ளது. கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
இந்தப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இதனுடன் படத்தின் பெயர்கள், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர்களும் வெளியாகியுள்ளது.
'பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் பெயர்கள் இதோ
சுதா கொங்கரா இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், ஷாந்தனு, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கம்'. இந்த படத்திற்கு சுதா கொங்கரா, ஷான் கருப்பு சாமி ஆகியோர் கதை எழுதியுள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லவ் பண்ண உட்றணும்'. இந்த படத்திற்கு விக்னேஷ் சிவனே கதை எழுதியுள்ளார்.
வெற்றி மாறன் எழுதி இயக்கியுள்ள படம் 'ஓர் இரவு'. இந்தபடத்தில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'வான் மகள்'. இந்த படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.