'கொடி' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் 'பட்டாஸ்'. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஸதா நடித்துள்ளார். மேலும், ஸ்நேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
'விஸ்வாசம்' படத்திற்குப் பிறகு சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'சில் ப்ரோ', இரண்டாவதாக வெளியான 'மொரட்டு தமிழன்டா' இரண்டும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது, மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் 'ஜிகிடி கில்லாடி' சிங்கிள் பாடல் ஒரே இரவில் சக்கைப்போடு போட்டுவருகிறது.
இது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறுகையில், "அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கும் மேலான சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாடவைப்பது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தனுஷ்-அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றிக் கூட்டணி என்பதை இந்தப் பாடலின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது.