‘கொடி’ படத்துக்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் ‘பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதிலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஸடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'சில் ப்ரோ' தனுஷ் இப்போ 'முரட்டு தமிழன்டா'! - முரட்டு தமிழன்டா
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' படத்தின் இரண்டாவது பாடல் 'முரட்டு தமிழன்டா' தற்போது வெளியாகியுள்ளது.
'மாரி', 'அனேகன்', 'மாரி 2' ஆகிய படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இப்படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்துள்ளார். விவேக் - மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சமீபத்தில், வெளியான ’சில் ப்ரோ’ சிங்கிள் ட்ராக் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிவருகிறது.
இதனையடுத்து தற்போது 'முரட்டு தமிழன்டா' என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலையும் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே #MorratuThamizhanDa என்னும் ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.