அதன்படி, தமிழ் சினிமாவில் சுதந்திர வரலாற்றையும், சுதந்திர வீரர்களின் போராட்டங்கள் நிறைந்த வாழ்வையும் பதிவு செய்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பைக் காணலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், 1959ஆம் ஆண்டு வெளிவந்தது.
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவே வாழ்ந்திருப்பார். வெள்ளைத் தேவனான ஜெமினி கணேசன் நடித்திருப்பார்.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் அப்போதைய ஆங்கிலேய ஆட்சியர் ஆஷை எதிர்த்து இப்படத்தில் சிவாஜி பேசும் வீர வசனங்கள் ஒவ்வொன்றும் காலத்தால் என்றும் அழியாதவை. 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம் கட்டபொம்மனின் வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய ஒன்று.
கப்பலோட்டிய தமிழன்
சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி, வெற்றிகரமாக அதனை இயக்கி, அதன் காரணமாகவே ஆங்கிலேயரின் வெறுப்புக்கு ஆளாகி சிறை தண்டனை அனுபவித்த வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது இப்படம்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை முந்தைய படத்தைப் போலவே இதிலும் சிவாஜி வஉசியை கிரகித்து அப்படியே உருமாறியிருப்பார். சிவாஜியைத் தாண்டி பாரதியாக திரையில் வாழ்ந்து எஸ்.வி.சுப்பையா தனி ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திருப்பார்.
தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் வஉசி ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, தமிழ் சினிமா வரலாற்றில் இப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962ஆம் ஆண்டு இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரிகளே இப்படத்தின் பாடல்களில் எடுத்தாளப்பட்டன. பாரதியின் வரிகளில் அமைந்த ”சிந்து நதியின் மிசை நிலவினிலே”, ”வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்”, ”காற்று வெளியிடை கண்ணம்மா” ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
சுதந்திரப் பற்று மேலோங்கிய இயக்குநர் பி.ஆர்.பந்துலுவே இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
ராஜபார்ட் ரங்கதுரை
மேடை நாடக நடிகர் ராஜபார்ட் ரங்கதுரையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் என்றாலும், இப்படத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கியப் புரட்சியாளரான பகத் சிங், திருப்பூர் குமரன் ஆகியோரின் பாத்திரங்களில் சிவாஜி தோன்றி அனைவரையும் கவர்ந்திருப்பார்.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் பகத் சிங், திருப்பூர் குமரன் இருவர் குறித்தும் இப்படத்தில் நிகழ்த்தப்படும் மேடை நாடகக் காட்சிகள் சுவாரஸ்யமானவை. ”இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் பாடல் தமிழ் சினிமாவில் வெளிவந்த சுதந்திர வேட்கையைத் தூண்டும் பாடல்களில் முக்கியமான ஒன்று.
பாரதி
2000ஆம் ஆண்டு ஞான சேகரன் இயக்கத்தில் ஷாயாஜி ஷிண்டே பாரதியாராக நடித்து வியக்கவைத்த திரைப்படம் பாரதி. சுதந்திரப் போராட்டத் தியாகி பாரதியாரின் கவித்துவமான பக்கங்களையும், போராட்டங்களையும், கலைத்தன்மை குன்றாமல் பதிவு செய்தது இப்படம்.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் 2000ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியன்
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் ஃப்ளேஷ்பேக் காட்சிகள், தமிழ் சினிமாவில் பதியப்பட சுதந்திர வேட்கையைக் கடத்தும் காட்சிகளில் முக்கியமானவை.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் சுதந்திரப் போராட்ட காலத்தின் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த போராளியாக கமல்ஹாசனும், பொம்மலாட்டக் கலையின் மூலம் தேசப்பற்றை வளர்க்கும் பொம்மலாட்டக் கலைஞராக சுகன்யாவும் நடித்திருப்பர். இணையம் இல்லாத காலத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள், சமீபத்தில் ட்ரெண்டாகி அனைவராலும் மீண்டும் ரசிக்கப்பட்டது.
சிறைச்சாலை
1915ஆம் ஆண்டின் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் ஆங்கிலேயர்களின் கீழ் அந்தமான் சிறைக்கம்பிகளின் பின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனுபவித்த கொடுமைகளை துகிலுறித்துக் காட்டியது இப்படம்.
சுதந்திரப் பற்றை விதைத்த தமிழ் படங்கள் நேரடி தமிழ் படமாக இல்லாவிட்டாலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வலிகளை ஆவணப்படுத்திய இப்படம், இன்றும் சுதந்திர தின நாள்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் படங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இதையும் படிங்க:#HBDஆக்ஷன்கிங்அர்ஜுன்... வாய்ப்புகளை தனதாக்கி வெற்றி பெற்ற ’முதல்வன்’!