தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘உன் பார்வையில்’ படம் குறித்து மனம் திறந்த பார்வதி நாயர்! - un paarvaiyil movie news

‘உன் பார்வையில்’ படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.

உன் பார்வையில் படம் குறித்து பார்வதி நாயர்!
உன் பார்வையில் படம் குறித்து பார்வதி நாயர்!

By

Published : Mar 5, 2021, 12:44 PM IST

அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் நீண்ட தேடல்களுக்குப்பின் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு கதாபாத்திரத்தில், இயக்குநர் கபீர் லால் அறிமுக இயக்கத்தில் உருவாகும் ‘உன் பார்வையில்’ படத்தில் நடித்துவருகிறார். அவர் கற்பனையே செய்திடாத வகையில் இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

படம் குறித்து நடிகை பார்வதி நாயர் கூறுகையில், "மிகச்சிறந்த படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர் லாலின் முதல் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படம் பற்றி மிகப்பெரும் தெளிவான பார்வை அவரிடம் உள்ளது. படம் மிகச்சிறப்பாக வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதிலும் இரட்டை வேடம், நாயகியை மையப்படுத்திய மிக சவாலான, அழுத்தமான பாத்திரம் செய்வது பெரும் பாக்கியம்.

உன் பார்வையில் படம் குறித்து பார்வதி நாயர்!

தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இதுவரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்” என்றார்.

இதையும் படிங்க... சட்டப்பேரவை தேர்தல் 2021; மார்ச் 8ஆம் தேதி அமமுக நேர்காணல்
!

ABOUT THE AUTHOR

...view details