தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்': நடிகர் பார்த்திபன் - முழு ஊரடங்கு

சென்னை: ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், மீன்கள் வாங்க மக்கள் கூடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, 'இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்' என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

parthi

By

Published : Jul 19, 2020, 12:35 AM IST

இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் வைரஸின் தாக்கம் சமூகப் பரவலாக மாறும் வாய்ப்பு இருப்பதால், அதனைத் தடுக்க தமிழ்நாட்டில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

ஆனால், இன்று (ஜூலை19) முழு ஊரடங்கு என்பதால், சென்னை காசிமேட்டில் மீன்கள் வாங்குவதற்காக, நேற்று(ஜூலை 18) மக்கள் தகுந்த இடைவெளி இல்லாமல் கூடினர்.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், மீன்கள் வாங்க மக்கள் கூடிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details