கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதை கடைப்பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு இதை உணர வைக்கும் வகையில் ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ஒரு எலி, பூனையிடம் சிக்கிக்கொள்கிறது. பொதுவாக பூனை, எலியை பார்த்தால் கொன்றுவிடும். ஆனால் இந்தப் பூனை, எலியை கொள்ளாமல் அதை காப்பாற்றுகிறது. அதாவது பூனை தன்னிடம் சிக்கிய எலியை பிடித்து அருகில் உள்ள ஷூவின் உள்ளே அடைக்கிறது.