நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தனி ஒருவனாக அப்படத்தில் நடித்த பார்த்திபனை, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் பாராட்டினர்.
இரண்டு தேசிய விருதுகள் வென்ற இப்படம் தற்போது இந்தி, ஆங்கில மொழிகளில் ரீமேக்செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் இந்தி படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒத்த செருப்பு சைஸ் 7 ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களுக்குத் தெரிந்த பெயர்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:’என்னை உயர்த்தியது இந்தப் படம்தான்’- மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்